சந்தானம் நடித்துள்ள "கிக்" படத்தின் டிரெய்லர் வெளியீடு
#India
#Cinema
#TamilCinema
#release
#2023
#trailer
#Tamilnews
#Movies
#Movie
Mani
2 years ago

பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கிக்’ படத்தில் கதாநாயகனாக நடிகர் சந்தானம் நடித்துள்ளார். தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் தன்யா ஹோப், மற்றும் ராகினி திவிவேதி இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
பார்டியூன் பிலிம்ஸ் சார்பில் நவீன்ராஜ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அர்ஜுன் ஜனயா இசையமைத்துள்ளார். சுதாகர் ராஜ் ஒளிப்பதிவு செய்ய, நாகூரன் ராமச்சந்திரன் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டார். இப்படத்திற்கு தணிக்கை குழு சமீபத்தில் யு/ஏ சான்றிதழ் வழங்கியது.
இப்படத்தின் டிரெய்லரை சந்தானம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். 'கிக்' திரைப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.



